அன்ரோயிட் கைப்பேசிகளில் 3 சிம்கள் பயன்படுத்தலாம்!

தற்போது இரண்டு சிம்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் சந்தையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

இருந்தும் இரண்டினை விட கூடிய சிம் கார்ட்டினை பாவிப்பவர்களும் அதிகமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட கைப்பேசிகளை வைத்திருப்பார்கள்.இவர்களது பிரச்சினைக்கு தீர்வாக 3 சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடிய அடப்ரர் (Adapter) ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் அன்ரோயிட் கைப்பேசிகளில் இதனை இணைத்து பயன்படுத்த முடியும்.

எனினும் இது எப்போது விற்பனைக்கு வரும் என்பது தொடர்பிலும் விலை தொடர்பிலும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
Read More

உங்க மொபைல் சார்ஜ் செய்வதற்கு வியர்வை போதும்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையைக் கொண்டு மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக, நமது உடலின் தோலில் ஒட்டிக்கொள்ளும் வகையில் ஒரு சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர்.

அந்த கருவியானது, நமது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையில் உள்ள நொதிகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தேவையான எனர்ஜிக்களை உருவாக்கும்.

இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பயோ எனர்ஜி தொழில்நுட்பத்தை விட, இது அதிக ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என அராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சிகுழு மாணவர் வாங், “மக்களுக்கு எளிதாக பயன்படக்கூடிய வகையில் நாங்கள் இந்த தொழிநுட்பத்தை வடிவமைத்து வருகிறோம்.

இதன்மூலம் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது வெளியில் நடைபயணம் மேற்கொள்ளும்போது சுலபமாக தங்களுடைய மொபைல் பொருட்களுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், மனிதர்களின் உடல்நிலையை கண்காணிக்கும் வகையிலும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என ஆராச்ய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வியர்வையில் இருக்கும் குளுக்கோஸின் தன்மையைக் கொண்டு நம் உடல்நிலையின் தன்மை கண்கானித்துக்கொள்ளலாம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.​
Read More

Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது ?



மைக்ரோசொப்ட் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்காக அறிமுகம் செய்த இயங்குதளமே Windows Phone ஆகும்.

எனினும் இவ் இயங்குதளமானது ஏனைய மொபைல் இயங்குதளங்களைப் போன்று பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறவில்லை.

இவ்வாறிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது மற்றுமொரு சேவையான ஸ்கைப் சேவைக்கான அப்பிளிக்கேஷன் எதிர்காலத்தில் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது.

இது எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் இச் செயற்பாடானது நிரந்தரமானதாகும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் ஒருபோதும் Windows Phone மொபைல் சாதனங்களில் ஸ்கைப்பினை பயன்படுத்த முடியாது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்வருமாறு தெரிவித்துள்ளது,

Windows Phone 8, Windows Phone 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களில் ஸ்கைப் அப்பிளிக்கேஷன் பாவனையில் உள்ளது. எனினும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது. இதற்கு வருந்துகின்றோம் என தெரிவித்துள்ளது.
Read More