RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?

சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
Read More

பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி ?

பேஸ்புக்கில் தான் பலர் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நண்பர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், குடும்பத்தினர் கூட பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், தெரியாத நபர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் என பல ஐடி வைத்திருப்பார்கள்.
அதே சமயம் இந்த அக்கவுண்ட்டை நாம் இனி பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்த பின்பு அதை அழிப்பது என்று தெரியாமல் நிற்பர்.
பயன்பாட்டில் இல்லாத சில அக்கவுண்ட்டை தற்காலிகமாக செயலிழக்க வைப்பது போலவே, நிரந்தரமாகவும் அழிக்க முடியும்.
ஒருமுறை நமக்கு இந்த பேஸ்புக் அக்கவுண்ட் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் Helpல் சென்று delete my account கொடுக்கலாம் ஒரு முறை நீங்கள் delete my account கொடுத்துவிட்டாலும் உடனே அந்த அக்கவுண்ட் delete ஆகாது. 14 நாட்கள் வரை அப்படியே தான் இருக்கும்.
அதை நீங்கள் மீண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் அந்த அக்கவுண்ட் அப்படியே செயலிழந்து விடும்.
உங்களுடைய அக்கவுண்ட் நிரந்தரமாக செயலிழக்க நீங்கள் 14 நாட்கள் வரை அந்த அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fhelp%2Fdelete_account
Read More

வாட்ஸ் அப்பில் காலிங் வசதி

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வாய்ஸ் காலிங் வசதி உள்ளது.
இந்நிலையில் எல்லா தரப்பினரும் வீடியோ காலிங் செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு
பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை அதிகமான போன்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வகையினருக்கும் இந்த சேவையானது சென்றடைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், இந்த வீடியோ காலிங்கில் தற்போது முன்னணி வகிக்கும் ஸ்கைப் மற்றும் ஆப்பிள் பேஸ்டைம்க்கு இந்த வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More

யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது


யூடியூப் தளமானது தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது, HDR ( High Dynamic Range) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், பல வண்ணங்களை கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும். இதனால், காட்சிகள் அனைத்தும் தத்ரூபாமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் வாயிலாக பார்த்து மகிழ முடியும். இந்த வசதியினை யூடியூப் தனது தளம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.
Read More

புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு

புகைப்பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், அவை நிரந்தர பிறழ்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஸையன்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வின் முடிவு ஒருவர் புகைக்கும் சிகிரெட்டுகளின் எண்ணிக்கைக்கும் பாதிப்புக்கும் உள்ள நேரடி தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம் முதல் சிகரட் இலவசமாக ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான் தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி செய்வதால் நண்பர்கள் எங்கே வெறுத்து விடுவார்கள் என்று பயந்து புகைபிடிக்க தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ? எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்
  
Read More

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
x-sizing: border-box; color: #333333; font-family: "Source Sans Pro", Arial, sans-serif; font-size: 13px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
Read More