அந்த படம் பார்ப்பவர்களா நீங்கள் ? காத்திருக்கும் ஆபத்து.

இலங்கை, இந்­தியா நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் ஆபாச படம் பார்ப்­பதில் எந்­த­வித கட்­டுப்­பாடும் இல்­லாமல் இருப்­பதால் ஏரா­ள­மானோர் ஆபாச படங்­களை ஆண், பெண் என பாலின வித்­தி­யாசம் இன்றி சிறுவர் முதல் பெரி­ய­வர்கள் வரை வயது வித்­தி­யாசம் இன்றி பார்த்­து­வ­ரு­கின்­றனர்.

தொடர்ந்து ஆபாச படங்­களை ஸ்மார்ட்­போனில் பார்ப்­பதால் இன்­டர்நெட் டேட்டா காலி­யா­வது மட்­டு­மின்றி மனமும் ஆபா­ச­மாக நாள­டைவில் மாறி­விடும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இந்த நிலையில் ஒரு­சில ஆபாச இணைய தளங்­க­ளுக்குச் செல்­லும்­போது, திடீ­ரென ஏதேனும் ஒரு மென்­பொருள் உங்­க­ளது ஸ்மார்ட்ஃ­போனில் தன்­னிச்­சை­யா­கவே இன்ஸ்டால் ஆகி­விடும்.

அதன் கார­ண­மாக உங்­க­ளது நெட் பேங்கிங், பேடிஎம், மின்­னஞ்சல் தர­வுகள், தனிப்­பட்ட சமூக வலைத்­தள தக­வல்கள் உள்­ளிட்ட பல்­வேறு பணப் பரி­வர்த்­தனை சேவை­களை ஹேக்­கர்கள் எளி­தாக ஹேக் செய்து, தக­வல்­களை திரு­டி­விடும் வாய்ப்­புகள் மிகவும் அதிகம் என்றும் நிபு­ணர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். மேலும் ஸ்மார்ட்­போனில் ஒளித்­து­வைத்­துள்ள அந்­த­ரங்க புகைப்­ப­டங்கள் வரை ஹேக்­கர்­களால் ஊடு­ருவ முடியும் என்றும் பல முக்­கிய பிர­ப­லங்கள் இப்­ப­டித்தான் சிக்கித் தவிப்­ப­தா­கவும் நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.
Read More

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய டிப்ஸ்


நம்மில் பெரும்பாலானோர் வெளியூருக்கோ அல்லது வெளியிடத்திற்கோ சென்றவுடன் Wi-Fi கிடைக்கிறதா என்று தான் பார்ப்போம்.

அப்படி பொது இடங்களில் கிடைக்கும் Wi-Fi இணையத்தள வசதியை நாம் பயன்படுத்தும் போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதனால் நமது மொபைல் போனில் பதியப்பட்டிருக்கும் போட்டோ, வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள்(Hackers) திருடி விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பாதுகாப்பானதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் Wi-Fi பாதுகாப்பானது என்றால் அதில் Password போன்ற தகவல்கள் கேட்கப்படும்.

Password பயன்படுத்தும் போது செய்திகள் பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.

WPA or WPA2 Password கேட்கவில்லையெனில், பாதுகாப்பில்லை என்று அர்த்தமாகும்.

பாதுகாப்பான தளங்களை பார்வையிடலாம்

நாம் பயன்படுத்தும் தளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில்(URL Address) https எனக் காட்டும்.

இதற்கு நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சரியான கால இடைவேளைகளில் அப்டேட் செய்வதன் மூலம் தகவல்களை திருடுவது கடினமாகிறது.
பணபரிவர்த்தனைகளை தவிர்க்கலாம்

பொது இடங்களில் ஓன்லைன் பணபரிவர்த்தனை செய்வதை தவிர்ப்பதன் மூலம் வங்கி கணக்குகள் திருடப்படுவதனை தடுக்கலாம்.



VPN இணைப்பினை பயன்படுத்தலாம்

பொது இடங்களில் Wi-Fi பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருப்பின் VPN (Virtual Private Network) இணைப்பினை பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encryption செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இதுதவிர 2FA-வை பயன்படுத்துவதன் மூலமாக கூடுதல் பாதுகாப்பினை பெறலாம்.

Wi-Fi யை தேவையற்ற போது தவிர்க்கலாம்

பொது இடங்களில் தேவையற்ற போது Wi-Fi இணைப்பதனை தவிர்க்கலாம், ஒருவேளை நீங்கள் இணைக்கும் போது உங்கள் போனில் Logout செய்யப்படாமல் வைத்திருக்கும் Email, Facebook, Twitter உட்பட உங்கள் கணக்கிலிருந்து தகவல்கள் திருடப்படலாம்.
Read More

ஜிமெயில் சிறப்பு அம்சம்

இதில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலகுவானதும், விரைவானதுமாக இருப்பதே முன்னணியில் திகழ்வதற்கு காரணமாகும்.
இவ்வாறிருக்கையில் பயனர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் மற்றுமொரு மாற்றம் ஜிமெயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் மின்னஞ்சலில் இணைக்கப்படும் (Attachment) கோப்புக்களில் உச்ச பட்ச அளவு 25MB ஆக காணப்பட்டது.
இந்த அளவிற்கு மேலான கோப்புக்கள் தரவேற்றப்படும்போது சுயமகவே அழிக்கப்பட்டு விடும்.
இதனால் பயனர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் இப்போது இந்த அளவு 50MB ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை விட அதிக அளவுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவ் ஊடாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Read More

ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் ?

ஸ்மார்ட் போன்களில் நுண்ணுயிர் கிருமிகள் வாழ்வதாக விஞ்ஞான ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்மார்ட்போன்கள் சம்மந்தமாக பல்வேறு ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதில், சமீபத்திய ஆய்வில் கழிவறைகளில் காணப்படுவதை விட பலமடங்கு பாக்டீரியா மற்றும் கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது 10-12 வகையான கிருமிகள் ஸ்மார்ட்போன்களில் இருப்பதும், இவற்றில் சில கிருமிகளை எவ்வித கிருமி நாசினிகளாலும் அழிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் திரையில் மூன்று விதமான புதிய நுண்ணுயிர் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கிருமிகளின் பாதிக்கப்பிலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போன் திரைகளை அவ்வப்போது மெல்லிய துணியை கொண்டு சுத்தம் செய்வது நல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்
Read More