ஸ்கைப்பில் ஒரு புதிய வசதி !

ஸ்கைப்பில்  புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் செய்யும் வசதி தான் அது.

இதன் மூலம், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் ஒருவர் தனது சேட் ரூமில் கெஸ்ட் ஆக ஸ்கைப் அக்கவுண்ட் இல்லாத தன் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

அப்பொழுது அவர்களுக்கு ஒரு லிங்க் செல்லும்.
பின்பு, அந்த லிங்ன்கை க்ளிக் செய்தால் போதும். அக்கவுண்ட் இல்லை என்றாலும் ஸ்கைப் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம்.

இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முதலில், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் வெப் ஸ்கைப் சென்று சேட் ரூம் மற்றும் கெஸ்ட் லிங்க் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும்.
இதில், நீங்கள் தான் அந்த பக்கத்தின் முதன்மையானாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் த கான்வர்செஷன் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.இப்போது, உங்களுக்கு சேட் ரூமின் லிங்க் தோன்றும்.
இந்த லிங்க்-ஐ நீங்கள் காப்பி செய்து உங்களுடைய நண்பர்கள் யார் யாரிடம் வீடியோ மூலம் பேச வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
லிங்க்-ஐ பெற்ற உங்களுடைய நண்பர்கள் அந்த லிங்க்கை க்ளிக் செய்தாலே போதும் உங்களது வீடியோ உரையாடலில் கலந்து கொள்ளலாம்.
Read More

வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள் தோன்ற

வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள் தோன்ற செய்வது எப்படி என்று இந்த காணொளியில் விளக்கியுள்ளேன் காணொளி பாருங்கள் விளமபரங்கள் தோன்ற செய்து சம்பாதியுங்கள்
Read More

ஸ்கைப் பதிவிறக்கம் செய்வது எப்படி ?

பலர் ஸ்கைப் பயன்படுத்துபவர்கள் ஆனால் அதனை கணனியில் பதிவிறக்கி கொள்ள தனது நண்பர்களின் உதவியை நாடுவர் அவர்களுக்காகவே இந்த காணொளி விளக்கம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
Read More

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype Downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

Read More

உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்

எனக்குள்ளே எதோ எதோ மாற்றம்
சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய்
புதிர் போடுகின்றாயோ
பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ?
விழி மூடி தூங்கும்
போது விடை தேட துடிக்கிறது என் இதயம்
உன்னை பார்த்து என் காதலை சொல்ல ஏங்குகிறேன்
உன்னை கண்டவுடன்  ஏனோ நான் சிலையாகிறேன்

Read More

Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?

Google AdSense கணக்கை  வைத்திருப்பவர்கள் தங்கள் இணைய தளத்திற்குரிய  விளம்பரங்களின் அளவு எப்படி பட்ட விளம்பரம் உருவாக்க வேண்டும் என்பதை
இந்த காணொளி  விளக்குகிறது
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
Read More

YouTube முலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

கூகிள் அட் சென்ஸ்  YouTube கணக்கிற்கு பெறுவது எப்படி 
Read More

வீட்டிலேயே விந்தணு சோதனை செய்யலாம்

பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே அல்லது மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்எனவே இது மாதிரியான சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், யோ என்ற கைகளுக்கு அடக்கமான ஒரு சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த யோ என்ற சாதனமானது, ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் போன்களுடன் பொருத்தக்கூடியது. எனவே இந்த சாதனத்தை வீட்டிலேயே வைத்து, ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற சில விபரங்களை கண்டுபிடிக்க முடியும். யோ என்ற சாதனத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தணுக்களை உறிஞ்சும் பிப்பெட் மற்றும் ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் இருக்கும் நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணையுமாறு பொருத்தி, பின் கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மொபைல் செயலியானது, விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையுமே கொடுத்து விடுகிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பை விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த யோ சாதனமானது மிகவும் பயன்படக் கூடியதாக உள்ளது.
Read More

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

இந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
  • மாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
  • பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Read More

ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும். முதலில் கார்டு எண்ணை டைப் செய்து, பின்னர் கார்டின் முடிவு திகதி மற்றும் வருடத்தை டைப் செய்து விட்டால் முக்கிய நம்பரான CVV நம்பர் திரையில் காட்டும். இதன் மூலம் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும். இது நம்பர்களை பெறுவது எப்படி ஹேக்கர்களுக்கு சாத்தியமாகிறது? ஒருவர் பலமுறை முயன்றும், யூகித்தும் ஒரு கார்டின் தகவல்களை பெற முடியும். இது 10 அல்லது 20 முறை முயற்சித்தாலே பலருக்கு சாத்தியபடுகிறது என நியூ காசில் பல்கலைக் கழகத்தின் முனைவரான முகமது அலி கூறுகிறார். இன்னொரு வழியாக இணையதளம் மூலம் செலுத்தப்படும் பல விதமான பேமண்ட்டுகள் விபரத்தை வைத்தும் கார்டு நம்பர் பற்றிய தகவல்கள் ஹேக் செய்யபடுகின்றன. முதல் ஆறு இலக்க விவரங்களைத் தவிர எந்த விவரமும் இல்லாமல் தொடங்கப்படும் முயற்சியும் கூட கார்டின் வகையையும் வங்கியின் விவரத்தையும் தரும். இதை வைத்து கூட மோசடி செய்யப்படலாம். கார்டு வைத்திருப்பவர்கள் அதில் இருக்கும் உச்சவரம்பு பணத்தை குறைவாக வைத்து கொள்வதே இதை சமாளிக்க சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
Read More

ஆங்கிலத்தை விரைவாக இலகுவாக கற்க கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள்

உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது.
அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள்
  • நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட Tamil to English அகராதியே அதிகம் பயன் தரக்கூடியது.
  • பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
  • தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
  • சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
  • நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
  • சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்கலாம், பார்க்கலாம்.சிலர் கிண்டல் செய்வார்கள். Never Mind It.
  • Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பாருங்கள் ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படியுங்கள். இதன் போது பொருள் தெரியாத, உச்சரிக்க தெரியாத செற்களை அகராதிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்!
  • On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
  • தினமும் குறைந்தது 5 வசனங்களாவது நீங்களே முயற்சித்து எழுதுங்கள்
Read More

RFID என்ற பெயரின் மறைக்கபட்ட இரகசியம் என்ன ?

சாத்தான் எப்படி தந்திரமாக இந்த பெயரை இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியில் வைத்து அதற்கு வெளியில் வேறு ஒரு அர்த்தத்தை கூறி அனைவரையும் முட்டாள் ஆக்கி வருகிறான்
Read More

பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி ?

பேஸ்புக்கில் தான் பலர் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நண்பர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், குடும்பத்தினர் கூட பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட், தெரியாத நபர்களுடன் பேச ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் என பல ஐடி வைத்திருப்பார்கள்.
அதே சமயம் இந்த அக்கவுண்ட்டை நாம் இனி பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்த பின்பு அதை அழிப்பது என்று தெரியாமல் நிற்பர்.
பயன்பாட்டில் இல்லாத சில அக்கவுண்ட்டை தற்காலிகமாக செயலிழக்க வைப்பது போலவே, நிரந்தரமாகவும் அழிக்க முடியும்.
ஒருமுறை நமக்கு இந்த பேஸ்புக் அக்கவுண்ட் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டால் Helpல் சென்று delete my account கொடுக்கலாம் ஒரு முறை நீங்கள் delete my account கொடுத்துவிட்டாலும் உடனே அந்த அக்கவுண்ட் delete ஆகாது. 14 நாட்கள் வரை அப்படியே தான் இருக்கும்.
அதை நீங்கள் மீண்டும் பயன்படுத்தாத பட்சத்தில் அந்த அக்கவுண்ட் அப்படியே செயலிழந்து விடும்.
உங்களுடைய அக்கவுண்ட் நிரந்தரமாக செயலிழக்க நீங்கள் 14 நாட்கள் வரை அந்த அக்கவுண்டை மீண்டும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fhelp%2Fdelete_account
Read More

வாட்ஸ் அப்பில் காலிங் வசதி

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே வாய்ஸ் காலிங் வசதி உள்ளது.
இந்நிலையில் எல்லா தரப்பினரும் வீடியோ காலிங் செய்யும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ காலிங் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு
பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை அதிகமான போன்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் எல்லா வகையினருக்கும் இந்த சேவையானது சென்றடைய வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில், இந்த வீடியோ காலிங்கில் தற்போது முன்னணி வகிக்கும் ஸ்கைப் மற்றும் ஆப்பிள் பேஸ்டைம்க்கு இந்த வாட்ஸ் அப் வீடியோ கால் வசதி கடும் போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read More

யூடியூப் தளமானது HDR ( High Dynamic Range) அறிமுகம் செய்து வருகிறது


யூடியூப் தளமானது தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது, HDR ( High Dynamic Range) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனால், பல வண்ணங்களை கொண்ட வீடியோக்களை பார்க்க முடியும். இதனால், காட்சிகள் அனைத்தும் தத்ரூபாமான முறையில் படமாக்கப்பட்டிருக்கும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களில் வாயிலாக பார்த்து மகிழ முடியும். இந்த வசதியினை யூடியூப் தனது தளம் ஆரம்பிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகம் செய்துள்ளது.
Read More

புதிய ஆய்வு : புகைப்பிடிப்பதால் மரபணுக்களில் நிரந்தர பாதிப்பு

புகைப்பிடிப்பதால் ஏற்படும் மரபணு பாதிப்பை ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், அவை நிரந்தர பிறழ்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். ஸையன்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியான ஆய்வின் முடிவு ஒருவர் புகைக்கும் சிகிரெட்டுகளின் எண்ணிக்கைக்கும் பாதிப்புக்கும் உள்ள நேரடி தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம் தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம் முதல் சிகரட் இலவசமாக ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான் தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி செய்வதால் நண்பர்கள் எங்கே வெறுத்து விடுவார்கள் என்று பயந்து புகைபிடிக்க தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ? எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்
  
Read More

பாஸ்வேர்ட் திருடர்கள் ?

பாஸ்வேர்டுகளை பலர் கடினமானதாக வைக்காமல் எளிதாக வைத்து கொள்கின்றனர்.
இது ஓன்லைன் மூலம் மோசடி செய்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் நமது கணக்கை வைத்து தவறு இழைக்க எளிதாக போய் விடுகிறது.
ஏன் இப்படி எளிதான பாஸ்வேர்டுகளை வைத்து தவறு செய்பவர்களுக்கு நாம் இடமளிக்க வேண்டும் என கணினி வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
x-sizing: border-box; color: #333333; font-family: "Source Sans Pro", Arial, sans-serif; font-size: 13px; line-height: 20px; margin-bottom: 20px; margin-left: auto; margin-right: auto; padding: 0px;">இப்படி மோசடி செய்பவர்கள் எளிதான பாஸ்வேர்டுகளை வைத்துள்ள சாதாரண மனிதர்களின் 73 சதவீத கணினி கணக்குகளை கண்டுபிடித்து விடுவதாக கணினி வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
பிரபல நிறுவனமான Yahoo கூறுகையில், வயது, abc123, 123456, Welcome, Sunshine, password, princess போன்றவைகளையே பலர் பொதுவான பாஸ்வேர்டுகளாக பயன்படுவதாக கூறியுள்ளது.
இந்த இணைய மோசடி மன்னர்களிடம் இருந்து தப்பிக்க நல்ல கடினமான பாஸ்வேர்டுகளை மக்கள் உபயோகபடுத்துவதே எல்லாவற்றுக்கும் தீர்வாக இருக்கும் என்பது கணினி வல்லுனர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
Read More

வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி!

வாட்ஸ் அப்பில் இதுவரை குரல் அழைப்பு வசதி மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ காலிங் அழைப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் வாட்ஸ் அப் சமூக வலைதளத்தை உபயோகப்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற இயங்குதளங்களால் ஆன போன் வைத்திருப்பவர்கள் இந்த வாட்ஸ் அப்பை உபயோகப்படுத்த முடியும். இதுநாள் வரை குரல் அழைப்பு வசதி மட்டுமே வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது. வீடியோ அழைப்பு வசதியை எப்போது ஏற்படுத்துவார்கள் என வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில் தற்போது சோதனை முயற்சியாக வீடியோ காலிங் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காலிங் வசதியானது தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்கும் போன்களில் மட்டும் வேலை செய்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல ஆண்ட்ராய்ட், ஆப்பிள் போன்ற இயங்குதளங்களில் இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Read More

புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்படுவது எப்படி ?

நவீன உலகில் புகைபிடிப்பது மிகவும் சர்வ சாதாரணம்  தண்ணீர் பருகுவது போல ஒவொரு மனிதரும் புகை பிடித்து  வருகின்றனர் .நான் பல புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் எப்படி இந்த பழக்கம் ஏற்பட்ட்து என்று கேட்டேன். அனைவரும் நண்பர்கள் மூலம் தர்ம உபதேசம்   முதல் சிகரட்  இலவசமாக  ஏற்பட்டது அத்துடன் நீ என்ன கற்கால மனிதனா? 21 ம் நூற்றண்டில் புகை பிடித்தால் தான் நவீன மனிதன் புகை பிடிப்பவர்களைதான்  தற்காலத்து பெண்கள் பார்க்கிறார்கள் ,நீ என்ன சின்ன பிள்ளையா ? என பல நண்பர்கள் கேலி  செய்வதால் நண்பர்கள் எங்கே  வெறுத்து விடுவார்கள் என்று பயந்து  புகைபிடிக்க  தொடங்கி விட்டேன் என்று கூறினர்.இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா???? புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர். முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்குஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில்


கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும் புகைப்பிடிப்து பாவமா ? இதை பற்றி வேதம் என்ன சொல்கின்றது ?
எசேக்கியேல் 8 7. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகி தங்களது உடலை கோடுப்பவர்களுக்கு அந்த பழக்ககத்தில் இருந்து விடுதலை கிடைக்க இறைவனிடம் வேண்டுவோம்
Read More

எங்கும் wifi


categories: , ,
இன்றெல்லாம் இணையப் பாவனைக்காக அதிகளவில் WiFi தொழில்நுட்பத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனைக் கருத்தில்கொண்டு பல்வேறு தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 4G தொழில்நுட்பத்தினை WiFi ஆக மாற்றும் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளன.
எனினும் இவை ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனித்துவமானதாகவே காணப்படும்.
ஆனால் தற்போது 100 வகையான நாடுகளுள் பயணிக்கும்போது எந்தவொரு வலையமைப்பிலிருந்தும் 4G சமிக்ஞையை WiFi சமிக்ஞையாக மாற்றக்கூடிய சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
GeeFi எனும் இச் சாதனத்தின் ஊடாக அதிகபட்டசம் ஒரே தடவையில் 10 சாதனங்களை இணைக்க முடியும்.
இதேவேளை இச் சாதனத்தினை பயன்படுத்துவதற்கு ரோமிங் வசதி அவசியம் இல்லை என்பதுடன் வரையறையற்ற (Unlimited) இணையப் பாவனையை மேற்கொள்ளவும் முடியும்.
இச் சாதனத்தில் 5,000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நேரம் செயற்படக்கூடியதாகவும் இருக்கின்றது.
தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இச் சாதனத்தின் விலையானது 110 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
Read More

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

முதுமையில் பறிபோன இளமையை நினைத்து கவலைப்படாதவர்கள் இருக்க முடியாது. அதனால், இளமையை தக்கவைத்துக்கொள்ளும் ஆராய்ச்சியை மருத்துவ விஞ்ஞானிகள் சிந்திக்காமல் இருப்பார்களா?
அந்த ஆராய்ச்சியில் பல காலமாக ஈடுபட்டு வந்தவர்கள் இப்போது வெற்றியும் கண்டுள்ளனர்.
உடலின் முதுமைக்கு காரணம், உடம்பில் உள்ள செல்களின் ஜீன்கள், டி.என்.ஏ. போன்றவை பலவீனமடைவதுதான். அதை எப்படி பாதுகாக்கலாம் என யோசித்த ஆராய்ச்சியாளர்களுக்கு, செல்களில் சக்தி கேந்திரமாக விளங்கும் மைட்டோகாண்ட்ரியாவில் மாற்றங்களை ஏற்படுத்தி முதுமையை கட்டுப்படுத்த முடியும் என அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி வில்ஹெம் போர் முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஆராய்ச்சியாளர்கள் குழு, ஜீன்கள், டி.என்.ஏ.வில் சேதம் ஏற்படுவதற்கு, நிகோடினமைடு அடினைன் டைலூசியோடைடு (என்.ஏ.டி.) என்ற சேர்மம் குறைவதுதான் காரணம் என்பதையும் கண்டுபிடித்தது.
அதனால், அந்த சேர்மத்தை (என்.ஏ.டி.) உருவாக்கி மீண்டும் உடலில் சேர்க்கும்போது, ஜீன்கள், மற்றும் டி.என்.ஏ. புத்துணர்வடைவதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சேர்மத்தை முதலில் புழுக்களுக்கும் எலிகளுக்கும் சோதனையாக கொடுத்துப் பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அவற்றின் செல்கள் புதிய பொலிவுடன் ஆரோக்கியமாக செயல்பட்டுள்ளது. புழுக்கள், எலியின் ஆயுளும் கூடியுள்ளது. அடுத்து மனிதர்களுக்குதான், இனி முதுமைக்கு ஓய்வுதான்.
இதை வில்ஹெம்போர் தலைமையிலான மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Read More

வாட்ஸ்ஆப்அக்கவுண் கண்டுபிடிக்க சூப்பரான வழிமுறைகள்

  • பொதுவாக போலி அக்கவுண்டுகளில் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் நம்பர்கள் ஸ்பூப் நம்பர்களால் உருவாக்கம் பெற்றிருக்கும். மேலும் அந்த போலி நம்பர்கள் அமெரிக்க எண்களாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
  • 1 என்று தொடங்கும் நம்பர்கள் போலியானவைகள். ஏனெனில் இந்த நம்பர்கள், விஓஎக்ஸ்ஓஎக்ஸ் (voxox) என்ற ஆப் மூலம் உருவாக்கப்பட்டது. எனவே இந்த நம்பர்களில் இருந்து மெசேஜ் வந்தால் அதற்கு ரிப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • 44 எனத் தொடங்கும் நம்பர்கள், அமெரிக்காவை மையமாக கொண்ட எண்களில் இருந்து எப்டபிள்யூ (Fw) கொண்டு உருவாக்கப்பட்ட போலியான வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்கள். எனவே 44 என்ற தொடக்க எண்களில் இருந்து மெசேஜ் வந்தால் அது போலியானவை என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு போலியான நம்பர்களில் இருந்து மெசேஜ் அனுப்பிய வாட்ஸ்ஆப் அக்கவுண்டின் புகைப்படமானது, ஒரு கார்ட்டூன் அல்லது வேறு ஏதாவது ஒரு போலியான சுயவிவரபடமாக இருக்கும்.
Read More

வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு

தற்போது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் சாதரணமாக உபயோகிப்பது வாட்ஸ் அப் தான். ஆனால் அதன் மூலம் மற்றவருக்கு பணம் அனுப்ப முடியும்.
வாட்ஸ் ஆப் மூலம் பணம் பெறுவதற்கு நாம் முதலில் நம் போனில் Free Charge ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த Free Charge ஆப் ஆனது உங்கள் மொபைல் எண் கொண்டு Sign up செய்தால் நாம் அதை Google Play Store ல் பெற முடியும்.
இதை பெற்றவுடன் நமது போனின் திரையில் வலது பக்கத்துக்கு அடியில் உள்ள More என்ற பட்டனை அழுத்தவும். இதை கிளிக் செய்தவுடன் Free Charge On Whats App என்ற அப்ளிகேஷனை கிளிக் செய்யவும்.
இதைத் தொடர்ந்து போனின் திரையின் அடியில் தோன்றும் Enable என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
இதை செய்வதன் மூலம் நாம் பயன்பாட்டை பெறுவதற்கான அனுமதி வழங்கப்படும், இதன் மூலம் நாம் Set up பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
இதற்கு பின்னர் என்ன நாம் வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்புவது மட்டும் தான்.
இதை செய்வதற்கு Free Charge On Whats App ஐ திறந்து பணத்தை பெற விரும்பும் ஒரு கண்டக்ட்தனை தேர்ந்தெடுக்கவும். பணம் அனுப்ப நீங்கள் பின்வரும் வடிவமைப்பில் மட்டும்தான் செய்தியை அனுப்ப வேண்டும்.
உதாரணமாக, நீங்கள் 500 ரூபாய் அனுப்ப விரும்பினால். '500FC' என டைப் செய்யவும், 100 ரூபாய் அனுப்ப விரும்பினால் '100FC' என டைப் செய்யவும்.
இதை நிகழ்த்தும் போது உங்கள் வாட்ஸ்ஆப் சென்ட் ஐகான் மேலே ப்ரீசார்ஜ் ஐகானை பார்க்க முடியும். இப்போது கிளிக் செய்து பண பரிமாற்றத்தை நிகழ்த்தலாம்.
Read More

இண்டர்நெட் இல்லாமலே ஜிபிஎஸ் பயன்படுத்தலாம்!

ஜிபிஎஸ் (GBS) என்பது ஸ்மார்ட்போனில் முக்கியமான அம்சமாகும். இதன் பயன் நாம் ஆளில்லாத இடத்தில் மாட்டிக் கொள்ளும் போது தான் தெரியும்.
இதைப் பயப்படுத்தி குறிப்பிட்ட இடத்தை சென்றடைய கண்டிப்பாக இண்டர்நெட் என்பது அவசியமானதாகும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் இண்டர்நெட் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?
கவலையவிடுங்க.. இண்டர்நெட் இல்லாமலே உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
குறிப்பிட்ட பயணத்திற்கு முன்பே ஆப்லைன் மேப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்.
உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் (Google maps) ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிட்டு நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்.
இடம் பெயரை பதிவு செய்த பின் கீழே உள்ள பதிவிறக்க பொத்தாபை கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கலாம். உங்கள் இண்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை நிகழ்த்தும்.
    Read More

    iPhone 7 சிறப்பியல்புகள்

    அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது.

    இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும்.

    குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


    இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7 கைப்பேசிகளில் முறையே 1715 mAh, 1960 mAh மின்கலங்களும், iPhone 7, iPhone 7 Plus என்பவற்றில் முறையே 2,750 mAh, 2900 mAh மின்கலங்களும் தரப்பட்டுள்ளன.

    இதன்படி iPhone 7 ஆனது 3G வலையமைப்பில் 14 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 10 நாட்களும் இயங்கக்கூடியதாக இருக்கும். அதே போல iPhone Plus ஆனது 3G வலையமைப்பில் 21 மணித்தியாலங்களும், ஸ்டான்ட் பையில் 16 நாட்களும் இயங்கும்.

    Read More

    உருளை கிழங்கு செடியில் தாக்காளி செடி ஓட்டுதல்

    ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும்  உருளை கிழங்கு செடியில் தாக்காளி செடி ஓட்டுதல்மூலம் இதனை சாத்தியபடுத்தலாம் இதன் செய்முறை
    விளக்க  காணொளி   பிரெஞ்சு மொழியில் உள்ளது காண்க உங்களது வீட்டு தோட்டத்தில்  தமிழில் உள்ள பழமொழி போல்  ஒரு கல்லில் இருமாங்காய்   ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் 
    Read More

    புதிய video chatting app ஒன்றை Google அறிமுகப்படுத்தியுள்ளது

    ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தக் கூடிய Duo எனப்படும் புதிய video chatting app ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது அப்பிளின் FaceTime, மைக்ரோசாப்டின் Skype, பேஸ்புக்கின் Messenger app போன்றவை இது போன்று முகம் பார்த்து மற்றவர்களிடம் பேசிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. இந்நிலையில் இதே போன்ற வசதியை அளிக்க முடிவு செய்திருப்பதாக கடந்த மே மாதம் கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படி Duo என்ற அப்பிளிகேஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற video chatting app போன்று இருந்தாலும் இதில் "Knock, knock" என்ற ஒரு புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மற்றும் தகவலை பெறும் நபர் என இருவரின் போன் நம்பர்கள் பதிவு செய்தால் மட்டுமே video chatting செய்ய முடியும். ஆனால் Duo அப்பிளிகேஷனில் தகவல் அனுப்பும் நபர் மட்டும் தனது மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டால் போதும். தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பதிவேற்றம் செய்து பயன்படுத்தக் கூடிய Duo அப்பிளிகேஷனின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    Read More

    Antivirus இலவசமாக 2018

    அற்புதமான Antivirus. விலை கொடுத்து வாங்க முடியவில்லையா கவலையை விடுங்கள் சில வழிமுறைகளை பின்பற்றி இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.அதற்கான வழிமுறைகள் இந்த காணொளியில்  விளக்கியுள்ளேன்.
    Read More

    என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்

    என்றும் இளமையாக இருக்க ஒலிவ் எண்ணெய்
    Read More

    windows 7 ஐ USB drive ல் இருந்து install செய்வது?

    முதலில் இதன் அநுகூலம் என்ன என்பதை பார்ப்போமானால் Windows 7ஆனது DVD  களிலேயே கிடைக்கும் DVD Drive இல்லாதவர்கள் USB Drive மூலமாக Windows 7 னை Install செய்து கொள்ளலாம்
    அதே போல விரைவாகவும்  Install செய்து கொள்ளலாம்....

    தேவையானது:
    *USB Flash Drive (Minimum 4GB)
    *Windows 7 or Vista files.

    இனி எவ்வாறு Windows 7 bootable ளினை USB Flash ல் உருவாக்குவது என்று பார்ப்போம்.

    1.USB Portல் USB Flash Drive யினை செருகவும்

    2. USB Flash Drive யினை NTFS ஆக Format செய்யவும்

    3. Windows7/Vista DVD யினை அதற்குரிய Drive ல் இடவும்
     
    4. பின் dvd Drive மற்றும் Flash Drive களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எழுத்தை (drive letter) பார்க்கவும்.  My Computer ல் இதனை காணலாம்
    (இங்கு நான் DVD Drive க்கு 'D' யும் Flash Drive க்கு 'H' எனவும் கொடுத்துள்ளேன்


    5.Command Prompt ஐ திறக்கவும்
    *Type cmd in Start menu search box and hit CtrlShiftEnter.
    அல்லது
    *Start menu > All programs > Accessories, right click on Command Prompt and select Run as administrator.

    6.  Command Prompt ல் பின்வருவதை டைப் செய்து என்டர் தட்டவும்

    D: CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்
                             இங்கு D பதிலாக உங்கள்  DVD drive letter யினை தரவும்

    அடுத்து  CD BOOT என டைப் செய்து என்டர் தட்டவும்

    7. BOOTSECT.EXE /NT60 H: என டைப் செய்து என்டர் தட்டவும்.
                           இங்கு H பதிலாக உங்கள்  Flash drive letter யினை தரவும்

    8. Windows 7/Vista DVD உள்ள கோப்புகள் அனைத்தையும் USB flash drive க்கு கொப்பி செய்யவும்

      9. இனி உங்கள் flash Drive ஆனது windows 7 bootable Flash Drive ஆக மாறிவிட்டது..

    இனி நீங்கள் எந்தக் கணணிக்கும் உங்கள் windows 7 bootable Flash Driveல் இருந்து Windows 7னை நிறுவிக் கொள்ளலாம்..

    ------
    Bios ல் boot priority  யினை USB from the HDD or CD ROM drive க்கு மாற்றி பின் வழமை போலவே நிறுவிக் கொள்ளலாம்-------

    Read More

    மாயாஜால எழுத்துக்கள்

    போட்டோஷாப் கோப்புகளைப் பயன்படுத்தி தான் நாம் எழுத்துக்களில் மாயாஜாலம் செய்ய வேண்டும் என்பதில்லாமல் எளிய CSS Code -ஐ பயன்படுத்தி நாம் எழுத்துக்களில் அழகை புகுத்தலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

    படம் 1 இணையத்தில் சில இடங்களில் பயன்படுத்தும் எழுத்துக்கள் சரியாக தெரியாமல் இருக்கும் இதற்காக நாம் அந்த இடங்களில் ஒரு JPG படம் போட்டோஷாப் மூலம் உருவாக்கி பயன்படுத்துவோம் ஆனால் இனி எளிதாக ஆன்லைன் மூலம் இதற்காக CSS உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு பயனுள்ள தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.wordpressthemeshock.com/css-text-shadow/ இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி எழுத்திருக்கும் கட்டத்திற்குள் சொடுக்கி நாம் தட்டச்சு செய்ய வேண்டிய வார்த்தையை கொடுக்க வேண்டும் அடுத்து எந்த எஃபெக்ட் வேண்டுமோ ஒவ்வொன்றாக சொடுக்கி எது பிடித்திருக்கிறதோ அதை வைக்லாம், Font Family என்பதை சொடுக்கி எந்த வகையான எழுத்துரு நன்றாக இருக்கிறதோ அதையும் தேர்ந்தெடுத்துவிட்டு Get code என்ற பொத்தானை சொடுக்கினால் தெரியும் Code -ஐ காப்பி செய்து எந்த இடத்தில் வேண்டுமோ அங்கு பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். எளிதாக நாமும் CSS மூலம் அழகான டிசைன் இது போல் உருவாக்கலாம். CSS பற்றி தெரியாதவர்களுக்கும் CSS பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
    Read More

    Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது


    கூகுள் வழங்கும் அற்ப்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த ஈமெயில் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம். நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ,அல்லது வேறு எங்கோ நம் ஈமெயில் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம். இப்படி இணையத்தில் நம்முடைய மெயில் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத ஈமேயில்களையும், ஆபத்தான ஈமேயில்களையும் நம்மக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam ஈமெயில்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம். Follow Steps: 1) உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள். 2) Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள். 3) Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும். 4) அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள். 5) அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும். 6) அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும். 7) அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam ஈமெயில்கள் தானாக Delete ஆகிவிடும். Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல ஈமெயில்களும் அழிந்து விடும்.
    Read More

    எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க

     பேஸ்புக், இன் ஊடாக   உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.

    ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.

    அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.

    இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்
    Read More

    எந்த மொழியிலும் படிக்கலாம் பேஸ்புக் பதிவை படிக்க

     பேஸ்புக், இன் ஊடாக   உலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்.

    ஆனால் இதற்கு தடையாக இருப்பது என்றால் அது மொழி மட்டும் தான். இதனை சரிசெய்ய பேஸ்புக் அருமையான திட்டத்தை வகுத்துள்ளது.


    அதாவது வேறு எந்த மொழியில் எழுதப்பட்ட பேஸ்புக் பதிவையும் நமக்கு தெரிந்த எந்த ஒரு மொழியிலும் படிக்கும் வகையில் புதிய வசதி ஒன்றை உருவாக்கி பரிசோதனை செய்து வருகிறது.

    இதற்கு Settings-> Language-> multilingual post என்பதில் சில மாற்றங்களை செய்து, ஒரு பேஸ்புக் பதிவை பல மொழிகளில் படிக்கும் வசதியை ஆன் செய்துக் கொள்ளலாம்
    Read More

    Google Chrome பிரவுசர் விரைவுபடுத்த சில நுட்பம்

    இணையப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் பிரவுசர்களில் 99 சதவீத மக்களின் தேர்வு கூகுள் குரோமாக தான் இருக்கிறது. இதன் செயல்திறன் மற்ற பிரவுசர்களை விட சிறப்பாக இருப்பதால் பயன்பாட்டார்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இதுவே நமது பொறுமையை அதிகமாக சோதித்தி விடும். அந்த அளவு மெதுவாக இருக்கும். இதனை மீண்டும் பழையை நிலைக்கு கொண்டு வர சில வழிகள் இருக்கிறது. உங்களது கூகுள் குரோமில் extensions உள்ள தேவையற்ற லிங்குகளைஅகற்றிவிடுங்கள். அதிக்கப்படியான லிங்குகள் பிரவுசர் செயல்பாட்டை குறைக்கும். இதற்கு More tools-> Extensions சென்று சரிசெய்யலாம் அல்லது Shift Esc மூலம் தோன்றும் Task manager box மூலம் சரி செய்யலாம்.அதிகப்படியான extensions பயன்படுத்துவதை விட்டுவிட்டு சில பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். Data Saver extension உங்கள் பிரவுசரில் எந்த அளவு மெமரி உள்ளது என்பதை காட்டும். இதேபோல் OneTab, Tab Suspender மற்றும் The GreatSuspender போன்ற பயனுள்ள extensions மட்டும் பயன்படுத்தலாம். குரோமில் உள்ள சில இணையத்தளங்களின் plug-ins-களை அகற்றி விடுங்கள். இது அந்த இணையத்தளங்களை சரியாக காட்டாவிட்டாலும், வேகத்தை அதிகரிக்கும். அதேபோல் சில வீடியோக்களை தானாகவே ஓடவிடும் plug-insகளை அகற்றிவிடுங்கள். இதனை chrome://plugins என டைப் செய்து சரி செய்யலாம். Browsing dataவில் உள்ள சிலவற்றை அடிக்கடி அழித்து வந்தால் கூகுள் குரோம் எப்போதும் வேகமாக இருக்கும். இதில் cache பகுதியை அழித்து வந்தால் பிரவுசர் வேகமாக செயல்படும். இதற்கு Chrome Settings-> advanced settings->Clearbrowsing data சென்று cache, cookies, browsing data என அனைத்தையும் அழிக்க முடியும்.
    Read More

    அட்டகாசமான வசதி பேஸ்புக்இல்விரைவில் அறிமுகம்

    இன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேடுபொறிகள் (Search Engine) காணப்படுகின்றன. இவற்றில் இன்றுவரை முதல்வனாக திகழ்வது கூகுள் ஆகும். ஆனால் பேஸ்புக் நிறுவனம் கூகுளின் தொழில்நுட்பத்தினையும் தாண்டிய தேடுபொறியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelegent) நுட்பத்தினை கையாளவுள்ளது. Facebook Deep Text எனும் குறித்த தேடு பொறியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன் ஊடாக ஒரு செக்கனில் பல்லாயிரக்கணக்கான போஸ்ட்களை தேட முடியும். தவிர இந்த வசதியானது 20 மொழிகளில் கிடைக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் பேஸ்புக் இணையத்தளம் கூகுளிற்கு பாரிய சவாலாக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

    Read More

    அற்புதமான Antivirus இலவசமாக 2018

    அற்புதமான Antivirus. விலை கொடுத்து வாங்க முடியவில்லையா கவலையை விடுங்கள் சில வழிமுறைகளை பின்பற்றி இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.அதற்கான வழிமுறைகள் இந்த காணொளியில்  விளக்கியுள்ளேன்.
    Read More

    Blogger இல் விளம்பரங்களை உருவாக்க மென்பொருள்

    விளம்பர Bannerகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.ஏனென்றால் இதில் பல Template கள் இருக்கின்றன அதுவும் அளவு ரீதியாகவும் (728 x 90, 468 x 60) வகை (Category) ரீதியாகவும்  இருக்கிறது.நமக்கு எந்த அளவில் வேண்டுமானாலும் தெரிவு செய்து Banner களை உருவாக்க முடியும்.இப்படி நாம் உருவாக்கிய  Bannerகளை 

    SWF
    GIF
    AVI
    JPG
    PNG
    TIFF
    BMP

    போன்ற Format இற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

     Download செய்வதற்கு

    http://www.bannerdesignerpro.com/download/BannerDesignerPro.EXE

    http://www.mediafire.com/?5y0u2kt3xq76jd8


    இதையும் பயன்படுத்தி பாருங்கள. 

    Easy GIF Animator 5 pro
    Read More

    WhatsApp Gold திருடும் ஹேக்கர்கள் உஷார்

    WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.

    இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.


    உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.

    இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் உஷாராக இருந்து கொள்ளுங்கள்.
    Read More

    கணணிகளிலும் வாட்ஸ் அப்

    இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான். புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இச் சேவையினூடாக பகிரப்படக்கூடியதாக இருத்தல் இதற்கு காரணமாகும். எனினும் இச் சேவையினை இதுவரை காலமும் மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந் நிலையில் தற்போது அப்பிளின் Mac, மற்றும் ஏனைய இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணணிகளில் பயன்படுத்தக்கூடிய வாட்ஸ் அப் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி விண்டோஸ் 8 மற்றும் OS X 10.9 ஆகியவற்றிற்கு பின்னரான இயங்குதளங்களில் இம் மென்பொருளைப் பயன்படுத்த முடியும். மேலும் இதனை ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷனுடன் இலகுவாக ஒருங்கிணைக்க (Synchronized) செய்துகொள்ள முடியும். இதற்காக கணணினியில் வாட்ஸ் அப் மென்பொருளை நிறுவி அதனை ஆரம்பித்த பின்னர் தென்படும் QR குறியீட்டினை கைப்பேசியின் ஊடாக ஸ்கான் செய்தால் போதுமானது.
    Read More

    YouTube Live 360 எனும் புதியவசதி

    கூகுளைதாய் நிறுவனமாக கொண்டு செயற்படும் யூடியூப் நிறுவனமானது முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்குகின்றது. இந் நிறுவனம் கடந்த வாரம் YouTube Live 360 எனும் புதியவசதியினை பயனர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இவ் வசதியின் ஊடாக எந்தவொரு நிகழ்ச்சியையும் 360 டிகிரியில் பார்த்து மகிழ முடியும். இப் புதிய வசதியில் பொப்பாடகி டவுனின் நேரடி இசைநிகழ்ச்சி ஒன்று முதன் முறையாகப திவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார்30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய இந்த வீடியோவினை மவுஸின் உதவியுடன் 360 டிகிரியில் சுழற்றி பார்க்க முடியும். இதற்கு பிரத்தியேகமான கணணி வன்பொருட்களோ, மென்பொருட்களோஅல்லது Virtual Reality ஹெட்செட்களோ தேவையில்லை. அனைத்து வகையான கணணிகளிலும் இவ் வசதியினைப் பெற்றுக்கொள்ளமுடியும்
    Read More

    நீராகாரம்

    தமிழனின் உணவே மகத்துவம்.பழந்தமிழர் காலம் தொட்டே நமது உணவு பழக்கத்தில் முக்கியமான ஒன்றாக விளங்கும் நீர் ஆகாரம் அல்லது நீச்ச தண்ணி அல்லது புளி தண்ணி. இதை நாம் உணர்ந்தததை விட அயலான் உணர்ந்து அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சந்தை படுதியுள்ளர்கள் என்று விளக்கும் அருமையான காணொளி.
    Read More

    மாதுளம்பழத்தின் மருத்துவ குணங்கள்

    மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.

     நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

    மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர  :
    மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.
    ரத்த மூலம் கட்டுப்பட :

    பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

    உடல் குளிர்ச்சி பெற  :

    ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :

    மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

    வயிற்றுப் போக்கு, பேதி தீர  :

    மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

    வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர  :


    மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

    மாதுளம் பற்கள்  :

    பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகு
    Read More

    வீடியோ எடிட்டிங் செய்ய

    இத்தளத்திற்கு சென்று http://www.aimersoft.com/video-editor.htmlஎன்ற பொத்தானை சொடுக்கி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை  தறவிரக்கலாம். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.
    Aimersoft video editor crack Licensed e-mail: w2mlh@popgx.com
     Registration code: DA510E9A01FF1D1601591576B58D100B
    Read More