ஸ்கைப்பில் ஒரு புதிய வசதி !

ஸ்கைப்பில்  புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, ஸ்கைப்பில் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யாமலேயே வீடியோ காலிங் செய்யும் வசதி தான் அது.

இதன் மூலம், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் ஒருவர் தனது சேட் ரூமில் கெஸ்ட் ஆக ஸ்கைப் அக்கவுண்ட் இல்லாத தன் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

அப்பொழுது அவர்களுக்கு ஒரு லிங்க் செல்லும்.
பின்பு, அந்த லிங்ன்கை க்ளிக் செய்தால் போதும். அக்கவுண்ட் இல்லை என்றாலும் ஸ்கைப் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்தலாம்.

இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

முதலில், ஸ்கைப் அக்கவுண்ட் வைத்திருப்பவர் வெப் ஸ்கைப் சென்று சேட் ரூம் மற்றும் கெஸ்ட் லிங்க் ஆகியவற்றை தயார் செய்ய வேண்டும்.
இதில், நீங்கள் தான் அந்த பக்கத்தின் முதன்மையானாராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் த கான்வர்செஷன் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.இப்போது, உங்களுக்கு சேட் ரூமின் லிங்க் தோன்றும்.
இந்த லிங்க்-ஐ நீங்கள் காப்பி செய்து உங்களுடைய நண்பர்கள் யார் யாரிடம் வீடியோ மூலம் பேச வேண்டுமோ அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
லிங்க்-ஐ பெற்ற உங்களுடைய நண்பர்கள் அந்த லிங்க்கை க்ளிக் செய்தாலே போதும் உங்களது வீடியோ உரையாடலில் கலந்து கொள்ளலாம்.
Read More

வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள் தோன்ற

வலைப்பதிவின் சகல தலைப்பின் கீழ் கூகுள் விளமபரங்கள் தோன்ற செய்வது எப்படி என்று இந்த காணொளியில் விளக்கியுள்ளேன் காணொளி பாருங்கள் விளமபரங்கள் தோன்ற செய்து சம்பாதியுங்கள்
Read More

ஸ்கைப் பதிவிறக்கம் செய்வது எப்படி ?

பலர் ஸ்கைப் பயன்படுத்துபவர்கள் ஆனால் அதனை கணனியில் பதிவிறக்கி கொள்ள தனது நண்பர்களின் உதவியை நாடுவர் அவர்களுக்காகவே இந்த காணொளி விளக்கம் ஸ்கைப் பதிவிறக்கம் செய்வது எப்படி ?
Read More

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும்

புத்தகம் படித்து நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது... அதுபோல தான் ஆங்கிலமும் ..புத்தகம் படித்து ஆங்கிலத்தை    விளங்கிக்  கொள்வதுடன் , படிப்பதை விரைவாக்கிக் கொள்ளலாம் .  சரி  ஓர்  ஆசிரியரை  எமக்கென்று  ஏற்படுத்திக்  கொண்டால் ஆசிரியர் மூலம் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசுங்க.  முதலில்Skype Downloard பண்ணவும்  பின்னர்  இத்தளத்தில் இணைந்து  உங்களுக்குப் பிடித்த ஆசிரியரைப் பதிவு  செய்து  கொள்ளுங்கள்தொடர்ந்து கற்று கொள்ளுங்கள்..  பேசுங்க.பேசிகிட்டே  இருங்க   இங்கே 

Read More

உன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன்

எனக்குள்ளே எதோ எதோ மாற்றம்
சொல்ல தெரியல நீ ஏன் புரியாமல் இருந்தாய்
புதிர் போடுகின்றாயோ
பதில் ஏதும் சொல்லாது நீ பயணிதத்து ஏனோ?
விழி மூடி தூங்கும்
போது விடை தேட துடிக்கிறது என் இதயம்
உன்னை பார்த்து என் காதலை சொல்ல ஏங்குகிறேன்
உன்னை கண்டவுடன்  ஏனோ நான் சிலையாகிறேன்

Read More

Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?

Google AdSense கணக்கை  வைத்திருப்பவர்கள் தங்கள் இணைய தளத்திற்குரிய  விளம்பரங்களின் அளவு எப்படி பட்ட விளம்பரம் உருவாக்க வேண்டும் என்பதை
இந்த காணொளி  விளக்குகிறது
Google AdSense new ad unite உருவாக்கவது எப்படி ?
Read More

YouTube முலம் பணம் சம்பாதிப்பது எப்படி ?

கூகிள் அட் சென்ஸ்  YouTube கணக்கிற்கு பெறுவது எப்படி 
Read More

வீட்டிலேயே விந்தணு சோதனை செய்யலாம்

பொதுவாக குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்கும் தம்பதிகள், செயற்கை முறையில் கருத்தரிக்க விரும்பும் போது கணவரின் விந்தணுக்களை மருத்துவர் சோதித்து பார்ப்பது இயல்பான ஒன்றாகும். மருத்துவர்கள் விந்தணு பரிசோதனை செய்யும் போது, ஆண்களின் விந்து சாம்பிள் எடுத்து தர வேண்டும் என்று கூறுவார்கள். இதனால் மருத்துவமனையில் தரப்படும் அறைக்கு வெளியே அல்லது மருத்துவ பரிசோதனைக் கூடங்கள் அல்லது கழிப்பறைக்குப் போய் தான் விந்தணு சாம்பிள் எடுக்க வேண்டும்எனவே இது மாதிரியான சிக்கல்களை போக்க, மெடிக்கல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம், யோ என்ற கைகளுக்கு அடக்கமான ஒரு சாதனத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த யோ என்ற சாதனமானது, ஐபோன் அல்லது சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் போன்களுடன் பொருத்தக்கூடியது. எனவே இந்த சாதனத்தை வீட்டிலேயே வைத்து, ஆண்களின் விந்து திரவத்தில் இருக்கும் விந்தணுக்களின் நீந்தும் வேகம், அடர்த்தி, எத்தனை சதவீத அணுக்கள் செயல்படாமல் இருக்கின்றன என்பது போன்ற சில விபரங்களை கண்டுபிடிக்க முடியும். யோ என்ற சாதனத்தில் ஒரு கண்ணாடித் தகடு, விந்தணுக்களை உறிஞ்சும் பிப்பெட் மற்றும் ஒரு நுண்ணோக்கி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தில் இருக்கும் நுண்ணோக்கியை மொபைல் கேமராவுடன் இணையுமாறு பொருத்தி, பின் கண்ணாடித் தகடில் விந்து திரவத்தை வைத்து, யோ சாதனத்துடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் மொபைல் செயலியானது, விந்தணுக்களின் தன்மை பற்றிய அனைத்து விவரங்களையுமே கொடுத்து விடுகிறது. மேலும் செயற்கை கருத்தரிப்பை விரும்பும் தம்பதிகளுக்கு, இந்த யோ சாதனமானது மிகவும் பயன்படக் கூடியதாக உள்ளது.
Read More

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்

இந்த காலத்தில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதுடன், அறியாமல் சில தவறுகளை செய்து விடுவார்கள்.
மேலும் மாதவிடாய் காலத்தின் போது, பெண்களின் ஹார்மோன்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அதிக எரிச்சல் மற்றும் கோபமாக நடந்து கொள்வார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் ஒருசில மோசமான தவறுகளை அவர்களுக்கு அறியாமலே செய்து விடுவார்கள் அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
  • மாதவிடாய் காலத்தில், அன்றைய நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட நமது உடலுக்கு தேவையான ஆற்றலை நாம் சாப்பிடும் உணவுகள் வழங்குகின்றது. எனவே நமக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இதனால் கடுமையாக வயிற்று வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  • மாதவிடாய் காலத்தில் நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் ஜங்க் உணவுகளை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதால், பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த் தொற்றுக்கள் மூலம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்கள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரவில் தூங்காமல் இருப்பார்கள். இதனால் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மாதவிடாய் காலத்தில் நன்றாக தூங்குவது மிகவும் நல்லது.
  • பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஓய்வு மிகவும் அவசியம் எனபதால், அந்த நேரத்தில் மட்டும் பெண்கள் வேலைக்கு செல்லாமல் ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்ப்பது மிகவும் ஆரோக்கியமானது ஆகும்.
  • பெண்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் சானிடரி பேடுகளுக்கு பதிலாக துணியைப் பயன்படுத்துவார்கள். ஆனால் துணியானது, நோய்த் தொற்றுகள் மற்றும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே துணிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Read More

ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் அதிர்ச்சி தகவல்

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை உபயோகப்படுத்தும் மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒருவர் உபயோகப்படுத்தும் கார்டுகளை வெறும் ஆறு வினாடிகளில் ஹேக் செய்ய முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதை செய்ய நினைப்பவர்களுக்கு இண்டர்நெட் இணைப்புடன் கூடிய கணினி இருந்தால் போதுமாம்! தற்போது பெரும்பாலானா பண விடயங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவே நடைபெறுகின்றன. இது பல்வேறு வளைதளங்கள் மூலம் அதிகளவில் நடைபெறுவதால் இந்த முறைகேடுகளை கண்டுபிடிப்பது முடியாத காரியமாகும். முதலில் கார்டு எண்ணை டைப் செய்து, பின்னர் கார்டின் முடிவு திகதி மற்றும் வருடத்தை டைப் செய்து விட்டால் முக்கிய நம்பரான CVV நம்பர் திரையில் காட்டும். இதன் மூலம் ஹேக் செய்து மோசடியில் ஈடுபட முடியும். இது நம்பர்களை பெறுவது எப்படி ஹேக்கர்களுக்கு சாத்தியமாகிறது? ஒருவர் பலமுறை முயன்றும், யூகித்தும் ஒரு கார்டின் தகவல்களை பெற முடியும். இது 10 அல்லது 20 முறை முயற்சித்தாலே பலருக்கு சாத்தியபடுகிறது என நியூ காசில் பல்கலைக் கழகத்தின் முனைவரான முகமது அலி கூறுகிறார். இன்னொரு வழியாக இணையதளம் மூலம் செலுத்தப்படும் பல விதமான பேமண்ட்டுகள் விபரத்தை வைத்தும் கார்டு நம்பர் பற்றிய தகவல்கள் ஹேக் செய்யபடுகின்றன. முதல் ஆறு இலக்க விவரங்களைத் தவிர எந்த விவரமும் இல்லாமல் தொடங்கப்படும் முயற்சியும் கூட கார்டின் வகையையும் வங்கியின் விவரத்தையும் தரும். இதை வைத்து கூட மோசடி செய்யப்படலாம். கார்டு வைத்திருப்பவர்கள் அதில் இருக்கும் உச்சவரம்பு பணத்தை குறைவாக வைத்து கொள்வதே இதை சமாளிக்க சிறந்த வழி என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்
Read More

ஆங்கிலத்தை விரைவாக இலகுவாக கற்க கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள்

உலகத்தை சிறிய கூடைப்பந்தின் அளவிற்குச் சுருக்கி விட்ட இந்தக் கணினி கணத்தில், செவ்வாய்க்கு ரோவரை (Rover) அனுப்பும் விஞ்ஞான யுகத்தில், ஆங்கில மொழியின் சேவை அளப்பரியது.
அதன் தேவை அளவிட முடியாதது. உலகத்தின் மொழியாகவும், நவ நாகரீகத்தின் வழியாகவும் ஆங்கிலம் பார்க்கப்படுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப்போவதில்லை.
ஆங்கிலத்தை கேட்பதற்கும், பேசுவதற்குமான பயிற்சி முறைகள்
  • நல்ல தரமான ஆங்கில அகராதியை சொந்தமாக எப்போதும் கூடவே வைத்திருங்கள். அதன் மூலம் தினம் குறைந்தது பத்துப் புதிய சொற்களாவது அறிந்து கொள்ளுங்கள். இதற்காக English to Tamil அகராதியை விட Tamil to English அகராதியே அதிகம் பயன் தரக்கூடியது.
  • பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள்.விளையாட்டு வர்ணனையை செவிமடுத்துக் கேட்கலாம். உதாரணமாக கிரிக்கட் வர்ணனை. இதன் மூலம் பல புதிய அழகிய வார்த்தைகளைக் கேட்கலாம்.அர்த்தம் புரியாவிட்டால், அகராதியின் உதவியுடன் அவ் வார்த்தைகளின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் (English pronunciation), எப்படி உச்சரிக்கக் கூடாது என்பதனையும் கற்றுக் கொள்ளலாம்.
  • உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.
  • தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.
  • சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.
  • நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.
  • சிறுவர்களுக்கான ஆங்கில நிகழ்ச்சிகள், கார்டூன்களை ஆழ்ந்து கேட்கலாம், பார்க்கலாம்.சிலர் கிண்டல் செய்வார்கள். Never Mind It.
  • Discovery போன்ற Channelகள், News Channelகள் மற்றும் ஆங்கிலப் படங்களை Sub Title உடன் பாருங்கள் ஆங்கில செய்தித்தாள்கள், ஆங்கில சஞ்சிகைகள், ஆங்கிலக் கதைப் புத்தகங்கள் என்பவற்றை தெளிவாக உரத்துப் படியுங்கள். இதன் போது பொருள் தெரியாத, உச்சரிக்க தெரியாத செற்களை அகராதிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • உங்களுக்குள் நீங்களேயோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ ஆங்கிலத்தில் கதைத்துப் பழகலாம். பிழைகள் வரும்; வந்தால் நல்லது, ஏனென்றால் நீங்கள் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. முயற்சி செய்கின்றீர்கள்!
  • On line இல் கிடைக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி நெறிகளையும் முயற்சித்துப் பார்க்கலாம்.
  • தினமும் குறைந்தது 5 வசனங்களாவது நீங்களே முயற்சித்து எழுதுங்கள்
Read More